free medical camp
Search your village
Blood sugar level for Rs 10/-
January-1st 2025 New Year, in order to benefit everyone, blood sugar level can be checked in our hospital for Rs 10/- daily from 6.00 am to 8.00 am. .
நமது மருத்துவமனையில் ஜனவரி-1, 2025 புத்தாண்டு முன்னீட்டு , அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இரத்த சர்க்கரை அளவை தினமும் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை ரூ.10/-க்கு நமது மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ளலாம் .


நமது மருத்துவமனையில் 13-10-2024 (ஞாயிற்றுக்கிழமை) சர்க்கரை நோய்க்கான சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
நமது மருத்துவர் Dr.MOHAMMED ILIYAS MD (General Medicine) அவர்கள் சர்க்கரை நோயினை பற்றியும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனையினை வழங்கி ,முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும்
⦿சர்க்கரை அளவு ,
⦿இரத்த அழுத்தம் மற்றும்
⦿கால் பாத நரம்பு பரிசோதனை செய்து ⦿ ஊசி மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது .
இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
daibetic camp
A special camp for diabetes was held in our hospital on 13-10-2024 Sunday. Our doctor Dr.MOHAMMED ILIYAS MD (General Medicine) gave advice on diabetes and how to control it to all who participated in the camp. ⦿sugar level, ⦿Blood pressure and ⦿The foot nerve examination(Biothesiometer) was done injection and Medicines were given free of charge. Public participated and benefited in this camp.
Day in Andipattikottai
Sunday 01-10-2023 on behalf of our hospital At ANDIPATTIKOTAI A free medical camp was held. Dr.W.Ashwin He provided advice, injections and medicines in which the public participated and benefited. For more than one hundred and fifty civilians in the camp ⦿Medical advice, ⦿The needle, ⦿ Medicines ⦿Senior citizens above 60 years of age were also given free ID card for 50% discount. On behalf of our SVS Hospital, we would like to express our gratitude to honorable Mr.P.Ramasamy for organizing this camp well and to all the well-wishers and general public who have helped.On behalf of our SVS hospital, we thank everyone.

நமது மருத்துவமனையின் சார்பில் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை
ஆண்டிபட்டிகோட்டையில்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
Dr.W.அஸ்வின் அவர்கள்
ஆலோசனை,ஊசி மற்றும் மருந்துகள் வழங்கினார் இதில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். முகாமில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு
⦿மருத்துவ ஆலோசனை,
⦿ஊசி,
⦿மருந்துகள்
⦿60வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்களுக்கு 50%சலுகைக்கான அடையாள அட்டையும் இலவசமாக வழங்கப்பட்டது.
இம்முகாமினை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மதிப்பிற்குரிய திரு.P.ராமசாமி அவர்களுக்கும், உதவிபுரிந்த நல்லுள்ளங்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நமது SVSமருத்துவமனையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

நமது மருத்துவமனையின் சார்பில் (09-04-2023) ஞாயிற்றுக்கிழமை பள்ளபட்டி நகராட்சிக்கு உட்பட்ட லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது . இதில் டாக்டர் . நவீன் கிருஷ்ணன் அவர்கள் நோயளிகளுக்கு
►ஆலோசனை
►ஊசி
►மருந்துகள் இலவசமாக வழங்கினார்.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் .
Day in Lingamanayakkanpatti
On Sunday (09-04-2023) on behalf of our hospital, a free medical camp was held at Lingamanayakanpatti Panchayat under Pallapatti Municipality. In the presence of Panchayat Chairman Periasamy, Dr. Naveen Krishnan for his patients ►Advice ►injection ►Medicines were provided free of charge. Public participated and benefited.

நமது மருத்துவமனையில் 08/03/2023 புதன்கிழமை மகளிர் தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை பெண்களுக்கு மட்டும் மருத்துவர் ஆலோசனை இலவசமாக வழங்கப்பட்டது .
இதில் டாக்டர் .சினிமோல் அவர்கள் பெண்களுக்கு சம்மந்தப்பட்ட அனைத்து தொந்தரவுகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்
Womens day Offer
On the occasion of Women's Day on Wednesday 08/03/2023 in our hospital from 10.00 a.m. to 2.00 p.m. free doctor consultation was provided for women only. In this, Dr. Sinimol gave advice on all the problems related to women
Pulmonary camp
An examination camp to detect the proper functioning of human lungs through spirometry i.e. lung examination equipment was conducted free of charge examination at our hospital on 27/11/2022 Sunday from 10 am to 4 pm. The body weight, blood pressure, pulse and temperature of the examinees were all checked and a team of doctors led by Dr. Saravanan, a pulmonary specialist, examined the examinees. ■ Allergy Cold sores ■ Asthma If there are problems like shortness of breath, medicines are also prescribed and quality treatment is provided. Dr. Naveen was also present and gave advice.

நமது மருத்துவமையில் இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. மனிதனின் நுரையீரல் நல்ல முறையில் இயங்குவதை ஸ்பைரோ மெட்ரி அதாவது நுரையீரல் பரிசோதனை கருவி மூலம் கண்டறியும் பரிசோதனை முகாம் நமது மருத்துவமையில் 27/11/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை செய்தவர்களுக்கு அவர்களது உடல் எடை ரத்த அழுத்தம் நாடித்துடிப்பு டெம்பரேச்சர் அனைத்தும் சோதிக்கப்பட்டு நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர். சரவணன் அவர்கள்
■அலர்ஜி
■சளி
■ஆஸ்துமா
■மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதற்கான மருந்துகளையும் பரிந்துரை செய்து தரமான சிகிச்சை வழங்கப்பட்டது . டாக்டர் நவீன் அவர்களும் உடன் இருந்து ஆலோசனைகள் வழங்கினார்.

நமது மருத்துவமனையில் 19/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனை முகாம் நடைப்பெற்றது . அதில் நூற்றி எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு 1250/- மதிப்புள்ள எலும்பு புரை பரிசோதனை BMD TEST இலவசமாக பரிசோதித்து பின் டாக்டர் . கணேஷ் ஷங்கர் எலும்பு முறிவு சிறப்பு நிபுணர் அவர்களை ஆலோசனை செய்து மருந்து மற்றும் ஊசி இலவசமாக வழங்கப்பட்டது , மேலும் எக்ஸ்-ரே தேவையுள்ள நபர்களுக்கு குறைந்த விலையில் எக்ஸ்-ரே எடுத்து தரப்பட்டது .
ORTHOPEDIC FREE CAMP
A bone and joint examination camp was held in our hospital on Sunday 19/06/2022 from morning to afternoon. More than one hundred and eighty people were examined by Dr. Ganesh Shankar was consulted and medicines and injections were provided free of charge and X-rays were taken at low cost to those who needed X-rays.